Motivational quotes in Tamil to Inspire You Every Day – மோட்டிவேஷனல் மேற்கோள்கள்

Author: Wealthy Tamilan
Wealthy Tamilan’s Motivational Quotes in Tamil

Wealthy Tamilan is Motivational quotes in Tamil carefully selects a collection of. That focus on inspiring your greatest goals and pushing you forward. These quotes aim to inspire, encourage, and remind you of your great inner strength. When you need motivation to start your day or an encouraging push to keep going, these motivational quotes in Tamil can help reignite your original sparks. Step in, allow your creativity to flow, and embrace the power of these motivating quotes.

நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்.

அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது… அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை.

எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது.

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை.. எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்.

விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது.

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.

இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்.

உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்.

யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்.

Motivational Quotes in Tamil

தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்.

இது வலிகளால் உரம் போட்ட இதயம்.. சிறி சிறு துன்பங்களால் துவண்டு விடாது.. முட்கள் உள்ள வேலி தான் உறுதியானது.

என்னை யாருக்கும் பிடிக்கவில்லை" என்று கவலைபடுவதற்கு நீ சந்தையில் நிற்கும் பொம்மையல்ல.. நீ என்பது நீயே.. உன்னை உனக்கு பிடித்தால் போதும்.

வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்.

மனது சந்தோஷமா இருக்கும்போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை.. எப்பவுமே சந்தோஷமா இருங்க.. எதிர்காலத்தை எதிர்கொள்ள கஷ்டம் இருக்காது.

விழிப்பதற்கே உறக்கம்.. வெல்வதற்கே தோல்வி.. எழுவதற்கே வீழ்ச்சி.. இனிய காலை வணக்கம்.

இதயத்தில் எத்தனை வலிகளும் கவலைகளும் இருந்தாலும், இனிமையாக சந்தோஷமாக பிறரிடம் பேசினால் உலகமே உங்களிடம் பேச ஆசையும் ஆவலும் கொள்ளும்.

அழகாக இல்லை என்று வருத்தப்படாதே.. உன் தகுதி உயரும்போது நீ அழகாய் தெரிவாய்.

வெற்றி என்பது நூறு முறை விழுந்து, நூறு முறை எழுவது.

Motivational Quotes in Tamil

நீ வலிமையாக இருக்கவேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.

சுமக்கும் வரைதான் பாரம், சுமந்து விடுங்கள்.. கடக்கும் வரைதான் தூரம், கடந்து விடுங்கள்.

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

மற்றவர்கள் உன்னை கீழே வீழ்த்த முயன்றால், நீ அவர்களுக்கு மேலே இருக்கிறாய் என்று அர்த்தம்.

பிரச்சனைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.. கண்ணின் அருகில் வைத்தால், நம்முடைய பார்வையை மறைத்து விடும்.

சோர்வு உன்னைச் சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நிற்பதோடு சோம்பலுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து விலக்கவும் கற்றுக் கொள்.

நல்ல லட்சியத்தை ஏற்படுத்திக் கொள். அதற்காகவே, உன்னை மனிதனாக கடவுள் படைத்திருக்கிறார்.

குறிக்கோளின்றி வெறுமனே வாழ்வதில் அர்த்தமில்லை.

எதிர்காலம் பற்றி வீணாகச் சிந்திக்காதே. உனக்குரிய கடமையைத் துணிவுடன் செயல்படுத்து. வெற்றியோ, தோல்வியோ அதைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு.

வலியோடு நடத்தப்படுகிற போராட்டத்தால் மட்டுமே, வெற்றிகளை கூட விசித்திரமாய் கொடுக்க முடியும்.

மனம் நினைத்தால் மலையைக்கூட புரட்டலாம். நினைக்காவிட்டால், புத்தகத்தைக் கூட புரட்ட முடியாது.